முன்னேறி தாக்கு ………!

Spread the love

முன்னேறி தாக்கு ………!

செழிமைக்கும் எளிமைக்கும்
செந்தமிழ் முழுமைக்கும் ……..
அடிமையாய் மூழ்கவோ –
அட தமிழா எழுவாய் …..

வெந்தணல் மனத்திற்குள் –
வேகும் கனதிக்குள் …………..
பொசுங்கவோ நீயின்று ..?
பொடியாக்கி பகை முழக்கு ….

வந்தனர் ஆரியர் –
வலிகளை தந்திங்கு ……….
குந்திட விடுவதோ ..?
குல தமிழ் அழுவதோ …?

செய் நெறி விற்றுமே
செந்தமிழ் குடித்தவர் ………..
வந்தாளா விடுவதோ ..? – தமிழ்
வழி மாறி மடிவதோ ..?

முன்னைய பரம்பரை
முன் விட்ட தவறதை …..
பின்னைய பரம்பரை
பின் தொடர் முறையோ …?

கரிகாலன் வழி சொன்ன
கனதியாம் தமிழீழம் ……
ழுமையாய் பெற்றிட
முன்னேறி தாக்கு ………!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2019

Home » Welcome to ethiri .com » முன்னேறி தாக்கு ………!

Leave a Reply