முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
“இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. கட்டாயமாக நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு அப்பாவி மக்களின்உயிர்களே அழிக்கப்பட்டன என்றார்.