முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL
Spread the love

முட்டை ஆம்லெட் இப்படி செஞ்சா ரெம்ப சாப்பிடலாம் SAMAYAL TAMIL

முட்டை ஆம்லெட் இப்படி வீட்டில செஞ்சா ,பிள்ளைங்க முதல் ,பெரியவர்கள்
வரை ரெம்பவே சாப்பிடுவாங்க .

இந்த முட்டை ஆம்லெட் செய்வது மிக சுலபம் .ஈசியாக அதிக நேரம் இல்லாது செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

இப்ப இந்த முட்டை ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

வீட்டில் ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

அடுப்பில பாத்திரம் வைத்து கொள்ளுங்க ,அதில மூன்று மேசை கரண்டி எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
சிறிதாக வெட்டி வைத்த உருளை கிழங்கை சேர்த்து கொள்ளுங்க .

இந்த உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .மெல்லிய நெருப்பில் வைத்து ,உருளை கிழங்கை நன்றாக வதக்கி கொள்ளுங்க .பொடியாக நறுக்கிட்டு வெங்காயம் போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் ,உருளைக்கிழங்கை நன்றாக சேர்த்து வதக்கி வாங்க .
நன்றாக வெங்காயம் வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் சேர்த்திடுங்க .அதையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

இந்த நேரத்தில சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்க .
உப்பு ,இப்பொழுது சேர்த்தால் ,உருளைக்கிழங்கு ,வெங்காயம் சீக்கிரமா வதங்கி வரும் .சேர்த்திட்டு ரெம்பவே வதக்கி வாங்க .

இப்போது எல்லாம் நன்றாக வதங்கிருச்சு .இப்போ அடுப்பை நிப்பாட்டிடலாம் .

இன்னுமொரு மிக்சிங் போலில் ,மூன்று முட்டையை உடைத்து ஊற்றிடுங்க .
இது கூட ஒரு கரண்டி மிளகு தூள் ,தேவையான உப்பு சேர்த்து கலக்கி கொள்ளுங்க .நன்றாக அடித்து கலக்குங்க .

கலக்கியதும் கொத்தமல்லி இலையை அதில போட்டு ,அதையும் கலக்கிடுங்க .கூடவே நாம வதக்கி வைத்த வெங்காயம் ,முட்டைகோஸ் எல்லாத்தையும் இதில போட்டு கலக்கிடுங்க .

முட்டை ஒன்றுடன் ஒன்று இணையும் மாறு கலக்கி வாங்க .

இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து கலவையை ஊற்றிடுங்க .அப்புறம் முட்டை மேல சீஸ் ஊற்றிடுங்க ,அப்புறம் அதுக்கு மேலே முட்டையை ஊற்றிடுங்க .

இப்போ ஒரு பக்கம் வேகியிருச்சு .இப்போ மறு பக்கம் பிரட்டும் பொழுது ,ஒரு கோப்பையை வைத்து அதனோடு சேர்த்து பிரட்டி வாங்க ,ரெம்பவே நன்றாக வரும் .

இப்போ இந்த முட்டை ஆம்லெட் ரெடியாடிச்சு .சாப்பிட செமையாக இருக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க .

தரமான ,சுவையான ,இலகுவான முட்டை ஆம்லெட் ரெடி .மறக்காம நாள் தோறும் சமையல் செய்து சாப்பிட்டு வாங்க மக்களே .

https://www.youtube.com/watch?v=mIzHVwBv7YU

Leave a Reply