முடிந்தால் வா மோதலாம்
எழுந்தவர் வீழ்ந்தவர் நூறடா – இங்கு
எரியுது கேள்வி தீ பாராடா ….
தீர்வுக்கு நீர் நீ ஊற்றடா
தீராத பகை நீள் எதுக்கடா ..?
பொதுவென வந்தால் திறனடா
போர் என வந்தால் கள மடா …
எது இன்று உனக்கு சொந்தமோ …?
ஏற்று நீ வருவாய் மன்றமோ …?
அறியாதார் சிந்தைக்குள் ஆயிரம்
ஆமைகள் உள்ளதை காணலாம் …
புரிந்தவர் சிந்தைக்குள் ஆயிரம்
புரட்சிகள் வெடிக்குது மகிழலாம் ……
என்னடாய் சொன்னாய் ஏதிலி – சிந்தை
எண்ணா உள்ள போக்கிரி ….
யாரடா இங்கே சீர் கேடி …?
யாம் முன்னே என்னடா போர்க்கொடி …?
என் தமிழ் உனக்கென்ன கீழ் நிலையா ..?
என்னடா சொன்னாய் கேவலமா …
வன்னியின் மைந்தர்கள் மூலமே
வான் ஆண்டா சாட்சிகள் கூறுமே ….!
–வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -15/05/2018
வன்னி மைந்தன் கவிதைகள்