முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க
Spread the love

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்

கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யாவின் இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்க கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்துவது என்பது இங்கே..

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஐந்து தேக்கரண்டி தண்ணீர்

மஞ்சள்- சிட்டிகை

ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்

எப்படி செய்வது?

கொய்யா இலைகள், தண்ணீரை மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பேஸ்ட் பதத்துக்கு அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் கொய்ய பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.

பொடுகு நீங்க

Guava leaves for hair
கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும்
பொதுவாக தலைமுடி உதிர்விற்கு பொடுகு ஓரு முக்கிய காரணம். பொடுகு முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பாதித்து, வேர்களை பலவீனமாக்குவதோடு, முடி வெடிப்பு மற்றும் தலைமுடி உதிர்விற்கு வழிவகுக்கும்.

கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வாரத்தில் 3 முறை 4 கொய்யா இலையை எடுத்து தயிருடன் கலந்து விழுதாக அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், முடி உதிர்வு நின்று முடி நன்கு செழித்து வளரும்.