மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
Spread the love

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன் ,எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் இடம்பெற உள்ளதை அடுத்து ,அத்தியாவசிய பொருட்டாகள் முதல் ,பல விலை கழிவை ரணில் விக்கிரமசிங்கா அரசு ஏற்படுத்தி வருகிறது .

அதன் ஒரு தொடர்ச்சியாகவே மக்களுக்கு மானிய வட்டிவீதத்துடன் உதவி திட்டங்கள் வழங்க படுவதன் புதிய அறிவிப்பையும் பார்க்க முடிகிறது .

இவை நன்கு திட்டமிடப்பட்ட மக்களை ஏமாற்றும், ஒரு கபட நாடகமாக பார்க்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது.