மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

ரயில் மோதி வாலிபன் மரணம்
Spread the love

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா வரை பயணித்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5:00 மணியளவில் ரயிலின் இயந்திரம் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து, கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில்கள் ஹட்டன் நிலையம் வரை இயக்கப்படும் என ஹட்டன் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

வீடியோ