மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா

Spread the love

மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா

ஊரின் பெயரில் சங்கம் வைத்து
ஊரார் கொள்ளையடா- தினம்
ஊரின் மாந்தர்க் என் செய்தீர்
ஊரின் கேள்விக்கு பதில் இல்லையடா …

அறத்தை நாட்ட முன் வந்தார்
அருவாள் காவுதடா …..
அட டா இது தான் அவர்கள்
அறத்தின் நிலையோடா …?

எதுகை மோனை ஒன்றில் தானே
ஏற்றம் உள்ளதடா – சந்தம்
ஏற்ற இறக்கம் அறியா சிந்தையில்
ஏது கொள்ளுமடா …?

உண்டு கழித்து உழல்வது தான்
ஊர் சங்க நிலையோடா ..?
மறை கழன்றார் நிலை இதுவென்றால்
மன்றம் சிறக்குமோடா….?

சாதி ,மத ,அரசியல் ,கலப்பின்
சங்கம் உருப்படுமோ ..? – தம்பி
கூடு கட்டிய மலட்டு சிந்தை
கூண்டை உடைத்திடுவீர் …..

நக்கி பிழைக்கும் நாய்களுக்கு இங்கு
நக்கல் தொழில் தானோ ..?- முரசு
நகரம் செழிக்க ரவுடிகள் கூடி
நகர் மன்றம் வந்தாரோ …?

மண்டையில் ஏதுமில்லா மாந்தர்
மன்றில் முதல் நிலையாம் – நகர்
மன்றம் செழிக்க இவரது சிந்தை
மன்றுக்கு முதல் படியாம் …..

தானே மேலென ஆடும் ஆணவம்
தர நிலை இழக்கிறதே – பதவி
தவறிய விந்தில் முளைத்தார் ஏற்பின்
தர நிலை உயர்ந்திடுமோ ….?

  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் -03/03/2018
    மலட்டு சிந்தை வெளிச்சம் தருமா …?

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply