மறக்க முடியா நட்பு காலம்

மறக்க முடியா நட்பு காலம்
Spread the love

மறக்க முடியா நட்பு காலம்

திருவுடன் காந்தன் ரமேசுடன்
திருப்பங்கள் தந்திட்ட முரளியுடன்
அன்று பழகிய அக்காலம்
அடடா நினைவில் இனிக்கிறது

அன்பு செல்லா கண்ணனுடன்
அன்று அடித்த அரட்டையது
இன்றும் நினைவில் சிரிக்கிறது
இளமை காலம் இனிக்கிறது

பிரிக்கண்டல் பிரித் உண்பதற்கு
பிள்ளைகள் எங்கள் சண்டைக்கு
பஞ்சம் என்றும் இருந்ததில்லை
பழகிய நட்பில் பேதமில்லை

காதலில் திகழ்ந்த அக்காலம்
கனியா வயது முக்காலம்
எங்கள் நட்பில் உறவிருக்கும்
என்றும் வாயில் சிரிப்பிருக்கும்

முதலாளி சொன் கல கலப்பும்
முத்துலிங்கண்ணை பர பரப்பும்
கனகண்ணை தெளிக்கும் கடிகளுக்கும்
காதுக்கு என்றும் பஞ்சம் இல்லை

அன்றந்த தோட்டத்து வாழ்விருக்கே
அதுபோல் சுகம் எங்கிருக்கோ
விரைவில் யாவரும் ஒன்றிணைவோம்
விடுகதை பேசி மகிழ்ந்திடுவோம் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-04-2024

ஹொலண்ட்ல தோட்டத்தில் வேலை புரிந்த நம் தோழர் நினைவுகளை எண்ணிய பொழுது

ஹொலண்ட் மொழியில்
பிரிக்கண்டல் – சோசஸ்
பிரித்- சிப்ஸ் ,உருளை கிழங்கு பொரியல்