மறக்க முடியா அந்த நாட்கள்
கதிர் அறுத்து நெல்லுடைத்து
கலர் கலராய் பொங்கலிட்டு
ஊர் கூடி மகிழ்ந்த நாட்கள்
உள்ளத்தில மறையவில்லை ….
மூசு பனி வீசி வந்து
முழு உடலை நடுங்க வைக்க ….
வேகமாக புதிர் அறுத்து
வேக வைத்த பொங்கல் பானை …
நினைவுகளில் வந்தாட
நீர் உடைக்குது விழிகள் இன்று …
போட்டியிட்டு வெடி கொளுத்தி
பொங்கலிட்ட நாளதுவும் …
வேட்டி சட்டை புதுசு மாட்டி
வேகமாக சுற்றியதும் …..
காலையில உடல் கழுவ
கள்ளமிட்டு ஒளிந்ததுவும் ….
மனதில் இன்னும் மறையவில்லை -அந்த
மகிழ்வு இன்று கூடவில்லை …
தை பிறந்த நாளில் அன்று
தையல்களை தைத்ததுவும் ….
வெட்கத்தில வெண் பணிகள்
வெருண்டு வானம் ஒளிந்ததுவும்
இன்று அதை நினைத்தாலும்
இதயத்தில புது சுகம் தான் ….!
- வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -14-01-2018