மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
Spread the love

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .

வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .

நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .

நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .

அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .

குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,

அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .

மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .

கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .

எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,

சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .

Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .

ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.