மம்முட்டி பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய ரசிகர்
கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமன் சுரேஷ். இவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். மம்முட்டி படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவரது வழக்கம். மேமன் சுரேசுக்கு வருகிற 21-ந் தேதி திருமணம் செய்ய அவரது வீட்டாரால் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் மாமாங்கம் என்ற புதிய திரைப்படம். மேமன் சுரேசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் வெளியாக இருந்தது. தன்னுடைய திருமண நாளிலேயே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதால் தனது திருமணத்தை மேமன் சுரேஷ் கடந்த மாதம் 30-ந் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார்.
மம்முட்டி
மேமன் சுரேசுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. புது மனைவியுடன் தனக்கு பிடித்த மம்முட்டியின் திரைப்படத்தை வருகிற 21-ந்தேதி முதல் நாளே பார்க்கலாம் என்று சந்தோஷமாக காத்திருக்கிறார்.