மன்னித்து விடு

மன்னித்து விடு
Spread the love

மன்னித்து விடு

கண்ணிருந்தும் குருடானேன்
காதிருந்தும் செவிடானேன்
உன்னை எண்ணவே
உள்ளமே மறந்து போனேன்

விதியின் விளையாட்டில்
விளையாடல் நடக்குது
சதிகள் துரத்த
சாதனை தவிக்குது

என்ன நினைத்தாயோ
என்னை திட்டினாயோ
காலம் வரும் ஒரு நாள்
கண்ணே கலங்காதே

உள்ளம் வலிக்கும் போதினில்
உன் நினைவு வந்து போகும்
என் மனம் வலியாலே
ஏறி தணிந்து உருகும்

பேசமுடியா நிலையிலே
பேரிடர் தடுக்குது
வேலியுடைத்து வருவோம் -அந்த
வேளையிலே சந்திப்போம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-09-2024