மனைவிக்கு தீ மூட்டிய கணவர்

மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
Spread the love

மனைவிக்கு தீ மூட்டிய கணவர்

மனைவிக்கு தீ மூட்டிய கணவர் ,குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .

இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்தில் , ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், இரு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார் .

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில், மது போதையில் வந்த கணவன் அவருடன் முரண்

பட்டுள்ளார். இந் நிலையில் பெண்ணின் அபயக்குரல் சத்தம் கேட்டதும் அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணின் சகோதரன் உதவிக்கு ஓடி பார்த்த போதுஅவரது சகோதரி தீயில் எரிந்துகொண்டிருந்துள்ளார் .

உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பெண் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இதனிடையே, அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .