இதுதான் மனித வாழ்வு பார் …!

Spread the love

இதுதான் மனித வாழ்வு பார் …!

ஊருக்குள் வேட்டை நடக்குது பார்
உரையாடல் வீதி கேட்குது பார்
ஆளுக்குள் மோதல் வெடிக்குது பார்
ஆயிரம் புகார் கொட்டுது பார்

முன்னைய பகை போராடுது பார்
முகங்கள் இங்கே கிழியுது பார்
தன் மானம் இங்கே தவறுது பார்
தறிகெட்டு வார்த்தை கொட்டுது பார்

தானே மேலென கொத்துறார் பார்
தவறுகள் இங்கே கொட்டுறார் பார்
வீழ்வேனோ தானென விரட்டிறார் பார்
வீழ்ந்திட்டார் இப்போ மறந்திட்டார் பார்

சிந்தையில் தவறு சிரிக்குது பார்
சீக்கிரம் உன்னை மாற்றும் பார்
முன்னைய நிகழ்வு தவறுதான் பார்
மூளை கூறும் பொறுத்து பார்

பக்குவம் உன்னில் படருது பார்
பகையிலும் பாசம் பொழியும் பார்
போர்குணம் இன்று செத்தது பார்
பொற்குணம் உன்னில் மலருது பார்

இது தான் முதுமை இன்றுபார்
இளைப்பாறும் காலம் இதுவே பார்
தவறுகள் திருத்தும் அகவை பார்
தவறா மனிதம் இதிலே பார்

கடந்ததை எண்ணி வருத்தும் பார்
கல்லான மனமும் கனியும் பார்
இதுதான் பக்குவ முதுமை பார்
இதுதான் மனித வாழ்வு பார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 25-12-2021

    Leave a Reply