மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு
மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் மெத்தன போக்கினை காட்டுகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நேற்று (20) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணியானது நீண்ட இடைவெளிக்கு பின்பு இடம்பெறுகின்றது.
அரசாங்கமானது நினைத்தால் நிச்சயமாக இந்த உடலங்கள் தொடர்பில் ஒரு தெளிவான அறிக்கையை தரலாம் .
ஆனால் அகழ்வு பணியினை மேற்கொண்டு முடிவுகளை சரியான வழியிலே செய்ய வேண்டும் என்று ஏனையவர்கள் கோரிக்கை விடுமளவிற்கு அரசாங்கம் அந்த நடவடிக்கையில் மெத்தன போக்கினை காட்டுவது போல் தெரிகின்றது.
மனித புதைகுழி விடயத்தில் மெத்தன போக்கு ரவிகரன் குற்றச்சாட்டு
இன்றும் முதலில் நம்பிக்கை இருக்கவில்லை. இருந்தாலும் அதன் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களால் குறித்த பணி நடைபெறுகின்றது.
ஆனால் தொடர்ந்தும் அகழ்வு பணி நடைபெற வேண்டும். இதற்கான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பது தான் மக்களுடையதும் எங்களுடையதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும். பொறுப்பு கூறல் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பு கூறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்தார்
- அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம்
- மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்
- கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது
- ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்
- குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணை
- அழுகை சரத் பொன்சேகா
- அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல்
- காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
- இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்