மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி

அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
Spread the love

மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி

மனித கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டை – நோனாகம – வெலிபட்டன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச்சென்று அவர்களை நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

பிரதான சந்தேகநபர் சுமார் 19 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி

இதன்போது சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவுள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை
உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No posts found.