மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்
இதனை SHARE பண்ணுங்க

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி. பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகவும் முன்னர் பதவி வகித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடித்தக்கது.

மேலும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மொனராகலை
ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனை SHARE பண்ணுங்க