மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – ரஜினி

மிஞ்சிய சாதம் தூக்கி போடாமல் 10 நிமிடத்தில் தித்திக்கும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|LeftOverRice Sweet
Spread the love
மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது – ரஜினி

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள

படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில்

நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதில் நடிகர் ரஜினி பேசும் போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது, கஜினி படம்

பார்த்து இவர் படத்தில் நடிகனும் ஆசை பட்டேன், ஆனால், காலம் அப்போது அமையவில்லை. தற்பொழுது தர்பார் படம் மூலம் அமைந்திருக்கு.

என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், ரசிகர்கள் ஆடம்பரமாக என் பிறந்த நாள் விழாவை

கொண்டாட வேண்டாம், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.

இயக்குநர் பாலசந்தர் தான் எனக்கு ரஜினி காந்த் பெயர் வைத்தார், ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவருடைய

நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என்று என் மேல்

நம்பிக்கை வைத்தவர்கள். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.

ரு வெற்றி வேண்டும் என்றால் நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலை அந்த நேரத்தில் இருக்கும் மனிதர்கள் இருந்தால் தான் அந்த வெற்றிக் கிடைக்கும். அதிகம்பேர்

எதிர்மறையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம், அன்பு செலுத்துவோம் என்றார்.

Leave a Reply