மக்களை துரத்தி வாள்வெட்டு

மக்களை துரத்தி வாள்வெட்டு
Spread the love

மக்களை துரத்தி வாள்வெட்டு

மக்களை துரத்தி வாள்வெட்டு ,இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு , இலங்கையில் வீதியால் சென்றவரை நபர் ஒருவர் துரத்தி துரத்தி வாளினால் வெட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

போதையில் காணப்பட்ட நபர் நான்கு வாளுடன் வீதியால் சென்ற பயணிகள் மீது தாக்குதலை நடத்தினார் .

இவரது இந்த வன்முறை செயலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் அங்குள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கும் பலத்த சேதங்களை இவர் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு

இலங்கையில் போதைக்கு அடிமையாகி கூலிக்கு அமர்த்த படுகின்ற வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் ,கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது .

தலங்க கம என்கின்ற இந்த பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவமே தற்பொழுது செய்திகளாக வெளியாகி இருக்கின்றன .

இலங்கை ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இந்த செய்தியிடம் பிடித்துள்ளதுடன் குறித்த நபர் வாழ்வட்டும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

போதையில் மக்கள் மீது வாள்வெட்டு

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான வாள்வெட்டு குழுக்கள் அதிகரித்து காணப்படுவதும் ,மக்கள் மீது வாழ்வட்டு தாக்குதல் நடத்துவதும் ,கூலிக்கு இவர்கள் வேலை செய்வதன் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்றது .

தமிழக பகுதியில் அதிகரித்து செல்கின்ற இந்த வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக ,தற்பொழுது வெளிநாட்டு குழுக்கள் சிலது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து ஐரோப்பாவின் சில முக்கியமான நாடுகள் சிலரை கண்காணித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது .

இவ்வாறான நிலையில் தற்பொழுது இலங்கையின் தென்பகுதியில் இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது .

குறித்த நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

எங்கு செல்கிறது இலங்கை என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்காலத்தில் இடம்பெறும் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் எடுத்து காட்டுகிறது .