மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற கார் விபத்து
Spread the love

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற தியத்தலாவ கார் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இந்த கார் விபத்தில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் .

தியத்தலாவ நரியாகாந்தை கார் பந்தைய திடலில் இடம்பெற்ற கார் ஓட்ட பந்தயத்தில் ,கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,ஏழுபேர் பலியாகியும் 21 பேர் காயமடைந்துள்ளனர் .

பதுளை கார் பந்தயத்தில் பயங்கர விபத்து

இந்த கார் பந்தய விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பந்தயத்தில் ஈடுப்பட்ட கார் ஒன்று மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

இந்த கார் விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பதுளை மாவட்டத்தின் கார் பந்தைய திடலில் ஈடுபட்ட கார்களே இந்த விபத்தில் சிக்கி கொண்டன .

கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்தம்

மிக பெரும் கார் விபத்து ஏற்பட்டத்தை அடுத்து ,கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்த பட்டன .

ஆண்டுகள் தோறும் இதே தியத்தலாவ நரியாகாந்த்தை கார் பந்தைய திடலில் கார் ஓட்ட போட்டிகள இடம்பெறும் .

அவ்விதம் இன்றும் இங்கு இடம்பெற்ற பொழுதே இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

வழமைக்கு மாறாக இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

ஓட்ட பந்தய கார் பாதுகாப்பு வேலிகளை உடைத்து ,கார் மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

மக்களுக்குள் கார் மோதும் காட்சிகள் ,மக்களை கார் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த கார் பந்தயத்தில் நின்ற மக்கள் ,அந்த கொலை காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

அதில் மக்கள் காயமடைந்து அலறுவதும் ,காப்பாற்றும் படி கோருவதும் பதிவாகியுள்ளது .

மேற்படி கார் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .