மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்

Spread the love
மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்

வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.

தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு ஏமாற்றி விட்டார். குழந்தையுடன் தவித்து வருகிறேன் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈஸ்வர் – ஜெயஸ்ரீ

இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஈஸ்வர் எனது மகளுக்கு நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருக்கு திருமணத்துக்கு பிறகு குடி பழக்கம் அதிகரித்தது. கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து என்னை தாக்குவதுடன் மகளிடமும் தவறாக நடந்துகொள்வார்.

டி.வி. நடிகை ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது வீடியோ கால் செய்து பேசுவார். இதுபோன்ற செய்கைகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் இருந்து ஈஸ்வர் அபகரித்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Leave a Reply