போர் மகளே வாழ்க
களபூமி வேங்கைக்கும்
காலனி சலங்கைக்கும்
ஓட்டம் நடக்கிறது
ஓர்மம் வெடிக்கிறது
வெற்றி பெற்றுவிட
வேகம் பிடிக்கிறது
அப்பப்பா பிள்ளையின்
அகரம் தெரிகிறது
கரை நகர் மண்ணின்
கல கலப்பு தெரிகிறது
பிடிபட்ட பந்தும்
பிடியாணை கேட்கிறது
அடித்தெறிந்த மட்டையும்
அவமான படுகிறது
கோபத்தின் உச்சத்தில்
கொள்கை வெடிக்கிறது
சிகரம் ஏறிய
சிந்தைக்கு வாழ்த்து
பெருமை தேடிய
பெரு மகளே வாழ்த்து ..!
அன்புடன் – வன்னி மைந்தன்
ஈழம் காரைநகர் களபூமியை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற ஈழத்தமிழச்சி இங்கிலாந்து கிர்க்கெற் அணியில் இடம் பிடித்துள்ளார்.இவர் பொன்னாவளை களபூமியைச் சேர்ந்த தாமோரி ஆறுமுகத்தின் மகன் சபாரத்தினத்தின் பூட்டப் பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது.
நல் வாழ்த்துகள் அமுருதா.