போதையில் ரயிலை செலுத்திய சாரதி

போதையில் ரயிலை செலுத்திய சாரதி
Spread the love

போதையில் ரயிலை செலுத்திய சாரதி

போதையில் ரயிலை செலுத்திய சாரதி மக்களால் துரத்தி பிடிப்பு ,கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலை போதையில் செலுத்தி கொண்டிருந்த சாரதி கைது .

ஒன்றை செலுத்திக் கொண்டிருந்த சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்திவிட்டு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது .

குறித்த சாரதி கண்டிக்கு அருகில் சொல்கம் என்ற இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலிருந்த தப்பி ஓடிய நிலையில் ,அவரை மக்கள் துரத்தி பிடித்து ரயில்வே துறைகள் அதிகாரிகள் ஒப்படைத்தனர் .

தொடரூந்தை விட்டு தப்பி ஓடிய சாரதி

அந்த ரயிலை உதவி சாரதி மூலம் , ரயில் தற்போது உரிய ரயில்வே நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதிக மது போதை காரணமாக ரயிலை செலுத்தி சென்ற இந்த சாரதி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு வாய்ந்த நிலையில் வண்டிகளை செலுத்தி செல்ல வேண்டிய இவ்வாறான சாரதிகள் அத்துமறி இவ்வாறு ரயிலை செலுத்தி செல்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பாதுகாப்பான ரயில்வே கடமைகளை கடந்து செல்ல வேண்டிய இந்த ரயிலில் இவ்வாறு ரயில்வே சாரதிகள் மதுவை அருந்திவிட்டு செலுத்து செல்வதால் ,

அந்த ரயில்வே கடவைகளில் பயணிக்கும் மக்களும் இரயில் பயணிக்கும் மக்களும் பலியாக வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படுவதாக மக்கள் கூட்டம் சுமத்தி இருக்கின்றனர் .

ஆபத்தாக மாறிய தொடரூந்து பயணம்

கைது செய்யப்பட்ட ரயில் சாரதி , தற்பொழுது தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .

ரயிலில் பயணித்த மக்கள் அலறி அடித்து சம்பவங்கள் ,தற்பொழுது வெளியாகி உள்ளது .

தொடரூந்து சாரதி தப்பியோடும் காட்சிகள் தற்போது அதனை படம் பிடித்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இலங்கை எதை நோக்கி எங்கு செல்கிறது என்பது தொடர்பான ,விடயங்கள் இதன் ஊடாகவும் காணமுடிகின்றது .

பேருந்து விபத்துக்கள் மதுவை அருந்திவிட்டு ,தப்பி ஓடுதல் என்பன ,இலங்கை கட்டுக்கடங்காத தலை தெறித்து ஓடுவதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.