பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
Spread the love

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி ,போலீஸ் அதிகாரி மீது கணவன் மனைவி திடீர் தாக்குதல் .

இலங்கை களுத்துறை பகுதியில் நீதிமன்றம் ஒன்றுக்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த கணவன் மனைவி இணைந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கடும் தாக்குதலை நடத்தினர்.

நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக வருகை தந்த கணவன் மனைவி ஆகியோரை வழிமறித்த போலீஸ் அதிகாரி .பெண் அணிந்திருந்த உடையானது நீதிமன்றத்திற்கு பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம்

இதனை அடுத்து காவல்துறை அதிகாரிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது .

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்து முட்டி வெடித்த நிலையில் ,கணவன் மனைவி இணைந்து காவல்துறை அதிகாரியை சரமரியாக தாக்கினர்.

இதன் பொழுது பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் அதிகாரி தரத்திலான காவல்துறை அதிகாரி தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீதிமன்றங்களுக்கு வருகை தருகின்ற மக்கள் இந்த உடை தான் அணிந்து வருகை தர வேண்டும் என்கின்ற சட்ட ஏதும் இலங்கையில் காணப்படவில்லை .

ஆனால் போலீசார் வேண்டுமென்றே இந்த பெண் கணவன் மனைவி மீது விஷமத்தனமாக வலிந்து சீண்டும் நடவடிக்கை ஈடுபட்டு அவர்களை திசை திருப்ப நடவடிக்கை ஈடுபட்டதான தகவலாகவே இந்த சம்பவம் காணப்படுகிறது .

லஞ்சம் பெறுவதற்காக நடவடிக்கை

அல்லது இந்த அதிகாரி அவர்களும் லஞ்சம் பெறுவதற்காக இவ்வாறான ஒரு விடயத்தை கையாண்டாரா என்கின்ற விடயங்களும் தற்பொழுது விழுந்து வெடிக்கின்றன .

இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் பல்வேறுபட்ட சர்ச்சைகளையும் பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை சகா காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

கழுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை காவல்துறை அதிகாரி மீது நடத்த பட்ட இந்த தாக்குதல், சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல ,தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .