பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video

பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
Spread the love

பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video


தேவையான பொருட்கள்: 2கத்தரிக்காய்
1பெரிய வெங்காயம்
2பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
கடுகு
பெருஞ்சீரகம்
வெந்தயம்
குழம்பு மிளகாய் தூள்
புளி கரைசல்
தேங்காய் எண்ணெய்
உப்பு


செய் முறை:முதலில் கத்தாரிக்காயை பொரித்து எடுக்கவும் ,பின்னர் ஓரு வானலியில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விடவும் .

எண்ணெய் சூடானதும் சிறிதாளவு கடுகு போட்டு வெடிக்க விடவும் .பின்னர் வெங்காயத்தை சேர்க்கவும் உப்பையும் சேர்க்கவும் .

வெங்காயம் சிறிது வதங்கியதும் பூண்டு ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் எல்லாம் பொண்ணிறமாக வந்ததும் தூள் போடவும் .

பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video

நன்றாக ஒரு தடவை கிளறிவிடவும் ,பின்னர் புளி சேர்த்து நல்ல கிளறவும் ,பின்னர் தேவையான தண்ணீர் _(அல்லது பால் )சேர்க்கவும்.

தண்ணீர் சிறிது கொதித்ததும் பொரித்த கத்தரிக்காயை சேர்த்து நல்ல கிளறவும் பின்னர் மூடி போட்டு கொதிக்க விடவும் .

கறி நன்றாக வற்றி ,எண்ணெய் திரண்டு வந்ததும், கறியை அடுப்பில் இருந்து இறக்கவும்.

அம்புட்டு தாங்க வேலை சுவையான கத்தாரிக்காய் பொரித்த குழம்பு ரெடி.இப்போ சாதம் ,தோசை ,கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .

full video