பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
Spread the love

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில் ,இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது மண்ணின் மைந்தர்களையும் அழித்து சாதனை படைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .

போரில் வெற்றி கொண்டதன் ஊடாக ,அடுத்த தலைமுறையினர் இந்த யுத்தத்தை நோக்கி செல்லக்கூடாது என்பதாக ,தான் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

போரை ஒருபோதும் எமது மக்கள் விரும்பவில்லை ,அதனை மீளவும் நாங்கள் ஏற்படுத்தக் கூடாது, மக்கள் சமரசமான முறையில் செல்வதன் ஊடாகவே ,நாட்டை கட்டிக் காக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

ஆனால் அவரது நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, அந்த நூலை படிக்கின்ற பொழுது தெரியும் .

இலங்கையினுடைய மிக முக்கியமான இனவாதியாக சரத்பொன்சேகா காணப்படுகின்றார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான ,பல்வேறுப்பட்ட நாசகார தாக்குதலை முன்னின்று நடத்தி ,அந்த அமைப்பை அழித்தவர்களில் ,இவர் முதல்நிலை வகித்தார் .

மஹிந்த ராஜபக்சவன் ஆட்சி காலத்தில், இலங்கையினுடைய ராணுவ தளபதியாக விளங்கிய ,பொன்சேகாவை விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .

மஹிந்த ராஜபக்சுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அது மகிந்த ராஜபக்ச, மற்றும் எதிராக போட்டி இட்ட நிலையில் ,கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பழிவாங்கப்பட்டார் .

அவ்வாறான நிலையில் இன்றைய ஆளும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ,பொன்சேகாவின் நூலை பெற்றுக்கொண்டு ,அதனை வெளியீடு செய்து வைத்தார் .

இதனூடாக சிங்கள மக்கள் மத்தியில், இந்த நூல் வேகமாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றது .

வரும் நாட்களில் இந்த நூலில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்களை அவர் தம் மண்ணுக்காக போராடியவர்களை அழித்த இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ,அரசியல் புயலை கிளப்ப இந்த நூலை வெளியிட்டுளளார் என தெரிவிக்க படுகிறது .

கோட்டாவுக்கு ஆதரவாக நூலை எழுதிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சராய்க்கு இந்த நூல் சாட்டையடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .