பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
Spread the love

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா ,இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிக வருகின்ற நிலையில் ,

கூட்டமைப்பின் சார்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள புது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு வாக்கினை அளிக்குமாறு, மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.

ஒன்றுபட்டு தமிழ் மக்கள் ஒன்று கூடி நிற்பதை நாங்கள் இந்த தேர்தலில் காட்ட வேண்டும் எனவும் ,

ஆதலால் அவருக்கு பாரிய அளவிலான மக்கள் திரண்டு வந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என ,அவர் பேரன்புடன் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

என்னை நேசிக்கின்ற மக்களது அன்பு உண்மையாக இருந்தால் அரியேந்திரன் அவர்களுக்கு நேரடியாக வந்து லட்சக்கணக்கான மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும்,

அதுவே தான் தங்களுடைய இறையாண்மையுடன் கூடிய அரசியலை பெற்றுவிடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளுக்கு எதிரானவர் என அர்ச்சனா ராமநாதன் காணப்பட்ட பொழுதும் ,

அவ்வாறான பரப்புரைகள் அவருக்கு எதிராக செய்யப்பட்டு வந்த பொழுதும் அதை உடைத்து எறிந்து நான் தமிழன், தமிழனாக தமிழனுக்கு உதவுவோம் என அவர் தெரிவித்துள்ளது வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இருண்ட காலத்தில் இருந்து எம்மிடம் அடக்கு முறையின் உச்சத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் ,எம்மவர்கள் எம்மோடு என்றும் இணைந்து இருப்பார்கள் என்கின்ற ஒற்றுமையை ,எடுத்துக்காட்டு விதமாக அர்ச்சுனாவின் இந்த குரல் காணப்படுகின்றது.

தடைகளை உடைத்து படைகளை நகர்த்தி வெற்றி கொடியை நாட்ட வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பதால் ,

நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை அர்ஜுனார் இராமநாதனின் இந்த பொது வேட்பாளருக்கான ஆதரவு எடுத்துக்காட்டுகிறது.