பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

https://www.ethiri.com/?s=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Spread the love

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம் , கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கொண்டன .

இந்த மோதல் சம்பவத்தின் பொழுதுலொறி மற்றும் பேருந்து என்பன பலத்தை சேதமடைந்து காணப்படுவதுடன் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அச்ச நிலை காணப்படுகின்றது .

அந்த வகையில் இன்று சிலாபம் கொழும்பு பிராதன வீதியில் பேருந்து லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியாகி 15 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெருமது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து லொறி விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகளினால் 32க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன.

அதன் தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிகளின் அலட்சியின்மையும் போட்டி போட்டு அவர்கள் வாகனங்களை செலுத்தி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக உள்ளது .

அதனால் பேருந்து சாரதிகள் யாவரும் பயிற்றுவிக்கப்பட்ட நன்கு அனுபவம் வாய்ந்த வருவதாக தெரிவு செய்யப்பட்டு பேருந்துகளை செலுத்த அனுமதி

அளிப்பதன் ஊடாகவே நமது நாட்டில் இவ்வாறான பேருந்து விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்கின்ற கவலையும் கரிசனையும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து செல்வதால் பேருந்துகள் மிகவும் அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .

எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது .

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையில் பேருந்துகளில் நாம் சொன்ன படி அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெறுவது யாராலும் தடுக்க முடியாது.