பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
Spread the love

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம், இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அந்த பேருந்தில் பயணித்த, 13 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள்

மாலபே – ராஹுலபாடசாலை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உள்ளதாக ,அந்த பாடசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பயணித்த பேருந்து ,நீரோடை ஒன்றை கடக்க முற்பட்ட பொழுது, ,அதற்கு அருகில் விழுந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து விபத்து தொடர்பான, புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது .

சாரதிகளின் அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை பின்பற்றாமயே, இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து விபத்து தொடர்பான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக , இலங்கை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு குழுக்கள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றன.