பெண் மீது துப்பாக்கிச் சூடு

பெண் மீது துப்பாக்கிச் சூடு
Spread the love

பெண் மீது துப்பாக்கிச் சூடு

தனிமையில் வசித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு , இலங்கை காத்தான்குடி பகுதியில் தனிமையில் மகுடன் வசித்து வந்த பெண் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .

காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குறித்த இளம் பெண் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இளம் பெண் மீது துப்பாக்கி சூடு

32 வயதுடைய இந்த இளம் பெண் உடைய கணவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வருவதாகவும் அவ்வாறான அந்த இளம் தாய் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை.

துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனிநபர் பகமை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர் தொடர்பான விடயங்கள் தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என விசாரிக்க படுகிறார்கள் .

கூலிக்கு படுகொலை துப்பாக்கி சூடு

கூலிக்கு படுகொலையினை இவர் மேற்கொள்ள முயன்றாரா அல்லது இவரது தனிப்பட்ட பகைமை காரணமாக மேற்கொண்டாரா என்பது தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக இந்த விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.

இலங்கையில் என்றும் இல்லாதவாறு படுகொலை கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் எகிறி காணப்படுகின்றது .

நாள்தோறும் அல்லது வாரத்தில் இரண்டுக்கு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கை எங்கும் காணப்படுகின்றது .

அமெரிக்காவில் இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்று இலங்கையிலும் தற்பொழுது காணப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

இடம்பெற்று வருகின்ற விசாரணை பின்னரே முழுமையான விடயங்கள் தெரிய வருமென காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் ,விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.