பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை
Spread the love

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை , இலங்கை ஏலியகொட பகுதியில் வயோதிப தம்பதிகளை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்து கொள்ளையர்கள் வீடு புகுந்து பெருமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனைவி வெட்டி படுகொலை

ஏலியகொட பகுதியில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிப்பாஇ வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், அவர்களை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்துகொண்டு அங்கிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் என்பனவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலில் 74 வயதுடைய மனைவி பலியாகியும், 76 வயது உடைய கணவனை குளியறையில் கட்டி போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இவ்விதமான தொடர் கொள்ளைகள் கொலைகள் ,தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

போதை வாஸ்து கும்பல்கள்

பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் உறங்குகின்ற நிலையும் காணப்படுவதாகவும், சில கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.

போதை வாஸ்து கும்பல்கள் மற்றும் அரசியல் பின்புலத்தில் இயங்கும் சில கொள்ளை குழுக்களும் ,இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வழியாக இருக்கின்றன .

இந்த குற்ற ம்பவம் தொடர்பான விசாரணையில், இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

இதுவரை கொள்ளையர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.