பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா
Spread the love

பெண்ணால் உறவில் யுத்தமா

பெண்ணால் உறவில் யுத்தமா
பேரழிவில் வாழ்வு நித்தமா
மண்டை உடைந்து இரத்தமா
மனதில் என்ன பித்தமா

கட்டிய தாலி துச்சமா
கண்டவள் உனக்கு சித்தமா
எல்லாம் ஒருநாள் முற்று பெறும்
என்னவாழ்வென விரக்தி வரும்

வந்தவள் இடையில் சென்றிடுவாள்
வாழ்வில் உள்ளாள் துணையிருப்பாள்
முந்தைய நிலைகள் பிழையாகும்
முதிர்வில் விழியில் நீராகும்

இடையில் நாட்கள் இடராகும்
இதயம் கூட வேறாகும்
அடி வாங்கி வாழ்வு அழுகையில்
அந்தோ செயல்கள் தவறாகும்

அழகில் மயங்கி அலையாதே
அக்கினியில் நீயோ ஏரியாதே
வலிகள் தாங்கிய மனைவியவள்
வாழ்வில் உனக்கு பேறாகும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2024