பெண்கள் அறைக்குள் புகுந்தவர் மரணம்
மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பெண்கள் விடுதி எனவும், அனுமதியின்றி அடுக்குமாடி
குடியிருப்பிற்குள் நுழைந்த நபர், பாதுகாவலர் ஓடி வருவதைக் கண்ட நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்