பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி
Spread the love

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி ,வேலை பெற்று தருவதாக தெரிவித்து பெண்களை அடைத்து வைத்து பாலியல் வீடியோக்கள் எடுத்து விற்பனை செய்த தம்பதிகள் மடக்கி பிடிப்பு .

இலங்கையில் வெளிநாடு செல்வதற்கான வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக விளம்பரத்தை நடத்தி கவர்ச்சிகரப் பெண்களை தமது வீட்டுக்கு அழைத்து தம்பதிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .

பாலியல் தொல்லை

இவ்வாறு பாலியல் தொல்லைகளில் தொந்தரவுகளை வழங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக இந்த விளம்பரத்தை கண்ணுற்ற பெண்கள் இருவர் அந்த நிறுவனத்துக்கு சென்று தமது விண்ணப்பங்களை கோரி இருந்தனர் .

அதனை அடுத்து வீட்டுக்கு அழைத்த அந்த தம்பதியினர் அவர்களுக்கு வேலை பார்ப்பதாக வேலை பெற்று தருவதாக தெரிவித்து பாலியல் வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து நுகோடை போலீசார் தமது விசாரணகளை ஆரம்பித்து கைது செய்திருக்கின்றனர் .

பெண்களை இவ்வாறு விற்பனை

இதுவரை இவர்கள் பல்வேறுபட்ட பெண்களை இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றி பாலியல் காணொளிகளை பிடித்து, சந்தையில் பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ள தான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவத்தை அடுத்து தற்பொழுது இலங்கை போலீசார் குற்றப்பிரிவினை இணைந்து பாரிய விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர் .

விசாரணை முடிவிலேயே எத்தனை பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்ட என்பது தொடர்பாகவும், எவ்வாறு வீடியோக்கள் எடுத்து எங்கு விற்பனை செய்தது என்பது தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரும் பர பரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது