பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

Spread the love

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த சிற்றுண்டிகளை சாப்பிடாதீங்க…
பெண்கள் உடல் எடையை குறைக்க மாலை சிற்றுண்டியில் தவிர்க்க வேண்டியவை
நம்முடைய உணவுமுறையில் ஒரு நாளுக்கு மூன்று வேளை உண்பதை வழக்கமாக

கொண்டிருக்கிறோம். மூன்று வேளை உணவை 5 அல்லது வேளையாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதுஎன்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் உடலில் சேரும்

கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பலருக்கும் 3 வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் நொறுக்குத்தீனி சாப்பிடவில்லை என்றால் அந்த நாளே முழுடையடையாதது போல் இருக்கும்.

மாலை மேகங்களை பார்க்கும் போது குளிர்ந்த காற்றை உணரும் போது காரசாரமாக பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

இருக்கும் வேலைக்கு நடுவே ஏலக்காய் சேர்ந்த சூடான டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.

குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு

அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.

இவற்றை தவிர்த்து மாலை நேர சிற்றுண்டியை ஆரோக்கியமானதாக மாற்றி கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.

மாலையில் டீ, காபிக்கு பதிலாக மோர், கிரீன் டீ, முலிகை டீ, பாதாம் பால் குடிக்கலாம். நார்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடலாம்.

புரதச்சத்து நிறைந்த நட்ஸ், உலர்பழங்கள் சாப்பிடலாம்.

காய்கறி சாண்ட்விச், காய்கறி சாலட் உடன் அக்ரூட் பருப்பு, பேரீச்சம் பழம் சேர்த்து கொள்ளலாம்.

பழங்கள் சேர்த்த ஸ்மூர்த்தி, லஸ்ஸி பருகலாம்.

சிறுதானிய புட்டு, பணியாரம், காய்கறி சூப் குடிக்கலாம்.

இந்திய உணவு கலாசாரத்தை பொறுத்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளுக்க உடல் உடையை குறைக்கும் தன்மை உள்ளது, காரணம், ஆரோக்கியமான சமையல் முறை மற்றும் சமையல் பொருட்கள்.

கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இடம் பெறும் கொழுப்பு பொருட்கள், சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கலோரி, சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் எடையை அதிகரிக்க செய்யும்.

மேலும் சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன் போன்ற நோய்களை உண்டாக்கும். ஆகையால் மாலை சிற்றுண்டி பட்டியலில் நீக்க வேண்டியசில உணவுகள் இதோ…

சோடா, கார்பனேட்டட்பானங்கள் அதிக சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்த்த குளிர்பானங்கள்

சாக்லேட், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த கேக், குக்கீஸ்,

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் மற்றும் இறைச்சி.

வனஸ்பதி, வெண்ணெய், கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கிராஸ்பீத் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள்.

இந்த சிற்றுண்டிகளின் பெயரை கேட்டவுடனேயே சுவைப்பதற்கு தூண்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி இவற்றை தவிர்த்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    Leave a Reply