புலியாக இரு சொன்னவன் சிங்களவன்

புலியாக இரு சொன்னவன் சிங்களவன்
Spread the love

புலியாக இரு சொன்னவன் சிங்களவன்

புலியாக இரு சொன்னவன் சிங்களவன் ,நான் கொழும்பில் படித்த போது என்னுடைய மிக நெருங்கிய சிங்கள நண்பன் நுவான்.
நான் சிங்களத்தை கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அவனை என் நண்பனாக தேர்வுசெய்தேன்.

நாங்கள் இருவரும் ஒரே அறையில் ஒரே பாயில் படுத்துறங்கி ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்.

“றாக்கிங்” காலத்தில் பல தடவைகள் என்னை காப்பாற்றியவன்.

உயர்பாதுகாப்பு வலையத்தில் தங்க வீடு இல்லாதபோது அவன் தன்னுடைய வாடகை அறையில் எனக்கு இடம் தந்தான்.

சிங்களத்தை நுவான் தான் எனக்கு ஓரளவுக்கு பேசக்கற்றுக்கொடுத்தான்.

நாங்கள் தங்கியிருந்த வீடு “றத்தொளுகம” என்ற ஊரில் இருந்தது. ஆனையிறவில் தற்கொலைப்படைவீரனாக இறந்த சிங்கள ராணுவ வீரன் பிறந்த ஊர் அது. அவனுக்கு அங்கே பெரிய சிலை இருக்கிறது.

நான் படித்த ஹாட்லிகல்லூரியில்தான் விடுதலைப்புலிகளில் முதல் கரும்புலி மில்லர் அண்ணா கல்விகற்றான். றத்தொளுகமவில் உள்ள சிங்கள தற்கொடையாளி ராணுவ வீரனின் சிலையை கடந்துபோகும் ஒவ்வொரு நாளும் எனக்கு மில்லரின் ஞாபகம் தான் வந்துபோகும்.

ஒரு நாள் நுவான் என்னிடம் கேள்வி ஒன்றைக்கேட்டான்.

“மச்சாங் நீ புலியா?”

நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெளனமாக இருந்தேன்.

“நீ உண்மையான தமிழனாக இருந்தால் புலியாக இருக்கவேணும். ஏனெண்டால் நான் உண்மையான சிங்களவன். நான் JVP இக்குத்தான் ஆதரவு செய்வேன்”

அவன் சொன்னது அன்று புரியவில்லை. இப்போது புரிகிறது.

எழுதியவர் -தமிழ்ப்பொடியன்.