புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
Spread the love

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .

தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .

ஐந்து பேர் கைது

அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .

இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.