புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும் குறித்த தீ விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.