பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு
Spread the love

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

பிறந்தநாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் பிறந்தநாள் நிகழ்வில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ,அமெரிக்கா காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர் .

அமெரிக்கா ஹம்தன் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது, அங்கு ஒரு பந்தயம் வைக்கப்பட்டதாகவும், அந்த பந்தயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, திடீர் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பிற்பகல் 7 50 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ணுற்ற சாட்சிகள் தெரிவித்துள்ளனர் .

அதன் பொழுதே தமது அவசர சேவைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் காவல்துறையினர் ,பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்

பந்தயம் இடம்பெற்று கொண்டிருந்ததாகவும் ,அதில் இடம்பெற்ற முரண்பாட்டை அடுத்தே இந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு கலந்து கொண்ட நேரடி சாட்சிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர் .

நேரடி சாட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்த போலீசார் ,அவர்களை பிரதான சாட்சிகளாக வைத்து இந்த சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முன் நகர்த்தி செல்கின்றனர் .

நாள்தோறும் இடம் பெற்று துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர் .

கடந்த ஆண்டு மட்டும் 17,000க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதான புதிய புள்ளிவிவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சட்டவிரோத ஆயுதப் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொழுதும், சட்டமாக பெறப்பட்ட ஆயுதங்களை வைத்து ,இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்ற வருவதான ,தகவல்களும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத் தக்கது.