பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் எரிவாயு வெடித்து 4 பேர் காயம் வீடுகள் சேதம்
பிரிட்டன் பேர்மிங்காம் ,வொர் செஸ்டர் ஷையரில் உள்ள ஒரு வீட்டில்,
காஸ் வெடித்து சிதறியதால் ,அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
வீட்டின் கூரைகள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளது .
இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி நான்கு பேர் காயமடைந்தனர் .
பாதிக்க பட்டவர்களில் ஒருவர் பேர்மிங்கம் பகுதியில் உள்ள ,
குயின் எலிசபெத் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .
ஏனையவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த வெடிப்பு சம்பவத்தால் ,
அருகில் உள்ள ஐந்து வீடுகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆளை கொல்லும் உறைபனி குளிர் நிலவும் இவ்வேளையில் ,
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
துயரை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து வெடிப்பு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .