பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி
Spread the love

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி ,பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர், பிரான்ஸ் செல்வதற்காக அமைச்சுக்கு சொந்தமான நிதியிலிருந்து 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் நேற்று (01) கையளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் தலைவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் அவர் நாட்டின் பனை உற்பத்திகளை

பிரபலப்படுத்துவது தொடர்பாக 2021 செப்டம்பர் 4 முதல் 27 ஆம் திகதி வரை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

இந்த 23 நாள் பயணத்திற்காக, பனை அபிவிருத்திச் சபை செலவிட்ட தொகை 1,949,450 ரூபாய்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பனை தொடர்பான பொருட்களை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதை ஊக்குவித்தல், களஞ்சியசாலைகளை மேம்படுத்துதல், உள்ளுர் பனை

உற்பத்திகள் விற்பனை வலையமைப்பை முறையாகப் பேணுவதற்கு பிரதிநிதி ஒருவரை நியமித்தல் ஆகியனவே தலைவரின் பிரான்ஸ் விஜயத்தின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், 2021ஆம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்த வருமானம் பூஜ்ஜியமே எனத் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டிலுள்ள பனை உற்பத்திகளை இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி

விளம்பரப்படுத்துவதற்கு தலைவர் பிரதிநிதிகளை நியமித்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பனை உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகவர்கள் மூலம் இலங்கையில் பனை உற்பத்திகளுக்கான ஆர்டர்கள் கிடைக்காததால், ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

பிரான்ஸ் சுற்றுப்பயணத்திற்கு செலவழித்த தொகையை அவரிடமிருந்து திரும்ப பெற விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.