பிரான்சில் விழுந்த விமானம்

பிரான்சில் விழுந்த விமானம்
Spread the love

பிரான்சில் விழுந்த விமானம்

பிரான்சில் விழுந்த விமானம் மூவர் மரணம் ,பிரான்ஸ் நாட்டின் உல்லாச பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து கொண்டிருந்த, இலகுரக விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது .

பிரான்ஸ் நாட்டின் நான்கு பிரதான சாலையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

உல்லாச பயணிகள் விமான விபத்தில் பலி

இந்த விமான விபத்தில் சம்பவித்த பொழுது அதில் விமானி உள்ளிட்ட மூன்று பேர்கள் பயணித்ததாகவும் ,அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானம் அதி வேகசாலையியல் விழுந்து நொறுங்கிய பொழுதும் ,அந்த விமானத்துக்கு என்ன ஏற்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

இயந்திர கோளாறு காரணமாக அதிவேக சாலையில் ,இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என சுயாதீன தகவல் வெளியாகியிருக்கின்றன.

எனினும் குறித்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

அதிவேக சாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

அதிவேக சாலையில் விழுந்து நொறுங்கிய வேளையில் அவ்வளை அந்த சாலை வழி போக்குவரத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போலீசார் மற்றும் விமான படையினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர் .

இதற்கு முன்னரும் பிரான்சில் இவ்வாறான விமானங்கள் விழுந்து நொறுங்கி இருந்தது.

அதன் பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த விமானங்கள் விழுந்து நொறுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாக இருந்தன.

அதனை அடுத்து தற்பொழுது இன்று பிரான்சில் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறந்தவர்கள் வேறு எந்த நாட்டவர்கள் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவில்லை .

வரும் நாட்களில் முழுமையான விபரங்கள் முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி விமான விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

அதிவேக சாலை வழியாக பயணித்த மக்கள், அந்த விமான விபத்து காட்சியை காணொளி பிடித்து மக்கள் பர பரப்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்ற்னர் .