பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்-

Spread the love

பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்

உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில்


கிளிநொச்சியை சேர்ந்த தமிழீழ செயல் பாட்டாளரும்,நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரும் , பிரபல தொழிலதிபருமான Fast Auto, Carrosserie), நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவி கமலா , என அழைக்க படும் கமலாம்பிகை அவர்கள் இன்று மரணமாகியுள்ளார்

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார்

தமிழீழ தேசிய விடுதலை போராட்ட காலத்தில் ,கணவனுக்கு உறுதுணையாக நின்று பலம் சேர்த்த வீரமங்கை ,
தன்னலமற்று மக்களின் வாழ்வியல் நீதியின் வழியில் நேரே நடந்த திலகவதி, இன்று எம்மை எல்லாம் தவிக்க விட்டு சென்று விட்டார்

அன்னாரது ஆறா துயரில் தவிக்கும் ,கணவன் ,மற்றும் பிள்ளைகளின் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .

மரண அறிவித்தல் ….!

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020

வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்

சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள்

உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும், கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல

உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், மயூரி அவர்களின் பாசமிகு

மாமியாரும்,சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,

நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு 0033 662 3650 07
காமலேந்திரன் மகன் – 0033 6691 74390

இணைப்பு – இரண்டு ..எதிர் வரும் புதன் கிழமை அன்னாரின் இறுதி கிரியைகள் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளன என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .மக்கள் அதிகம் கூடிட முடியாத நிலை உள்ளதால் உங்கள் இரங்கலை இங்கே தெரிவிக்கலாம்

ஏன் தவிக்க விட்டாய் …?

புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள் click here

ஏன் தவிக்க விட்டாய் …?

பிரான்சில் கொரனோவால்
பிரான்சில் கொர
னோவால்

Leave a Reply