பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Spread the love

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்

பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்

ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்

ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023