பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு
இதனை SHARE பண்ணுங்க

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (01) இரவு வீடு உடைத்து திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.​

வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீட்டில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,​

தனிப்பட்ட தேவையின் நிமித்தம் வீட்டிலுள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்த சமயத்தில் நேற்றிரவு வீட்டின் பின்பக்கமாக சென்ற திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து பணம் மற்றும் நகை ஆகியவற்றினை எடுத்துச் சென்றுள்ளனர்.​

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு

இன்று காலை வீட்டினை திறந்த போது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையடுத்து வீட்டின் உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.​

குறித்த திருட்டுச் சம்பவத்தின் போது 6 1/2 பவுன் நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.​

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க