பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு
Spread the love

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு ,பிக்கு தாக்குதலில் ஒருவர் மரணம் .

இலங்கை கிரியுள்ள அயலந்தவா மாராவில் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கி இருந்தவரை பிக்கு தாக்கியதில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு,

மது போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு, விகாரையிலிருந்து தப்பிச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்பொழுதே அங்கு இருந்த நபர் ஒருவரை, போதை தலைக்கேறிய நிலையில் அவரை அடித்து படுகொலை செய்துள்ளார் .

பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தற்பொழுது பலியாகி இருக்கின்றார் .

கொலையை புரிந்த பிக்கு தற்பொழுது தலைமறைவு

இந்த படுகொலையை புரிந்த பிக்கு, தற்பொழுது தலைமறைவாகி உள்ளதை அடுத்து ,அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் , நடவடிக்கையில் குற்ற தடுப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக துறவிகள் என அழைக்கப்படும் பிக்குகளினால், மக்கள் ,மாணவர்கள், பெண்கள், என பலதரப்பட்டவரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

இது புத்த பிக்குகள் மீதும், துறவிகள் மீதும் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது .

ஒருவர் செய்கின்ற செயலினால் ,அனைத்து துறவிகளுக்கும், இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் ,புத்த மகாசங்கத்தை சேர்ந்த, சார்பு நபர்கள் தெரிவித்தது வருகின்றனர்.