பாலச்சந்திரன்

Spread the love

பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்
பாரே வியந்த தலைவன் வம்சத்தின்
பால்மணம் மாறாத பாலகன்.

தாழ்வே இல்லாக் கல்வியில் சிறந்த
தமிழின வருங்கால நாயகன்.

வாழச் சிறந்த தமிழீழ மண்ணில்
வாசம் வீசவேண்டிய சந்தணம்.

ஆளச் சிறந்த அரசன் குடும்பத்தின்
ஆகச் சிறந்த அறிவுச் சுந்தரம்.

மா தவம் செய்து மதிவதனி மங்கை
மகிழ்வோடு பெற்றெடுத்த மகவு.

பாதகம் செய்த பாவியர் பிடியிலும் இறுதிப்
பார்வையில் எத்தனை கனவு.

-பிறேமா(எழில்)