பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
Spread the love

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .

தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .

தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .

அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .

அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .

மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .

அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .

சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .

உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.