பாயும் பெண் புலி

பாயும் பெண் புலி
Spread the love

பாயும் பெண் புலி

காடு காத்த கரும்புலியை
கா தழைத்து கொன்றவரே
செய்த செயல் தவறாச்சு – சிசு
செம்புலியாய் பாய்ந்திருச்சு

கோட்டையிலே கொடி கட்டி
கொடுமைகளை உடைத்தெறிய
வீரமுடன் வந்திருச்சு – திறன்
விவேகமது கொண்டிருச்சு

நான் என்ற ஆணவத்தில்
நாடாண்ட கோமகனே
முடி தரித்த உன் ஆட்சி
முள் வேலியில் வீழ்ந்திருச்சு

அவள் அழுத கண்ணீர் துளி
அனலாக கொத்திருக்கு
குற்றவாளி உங்களை தான்
கூண்டில் அடைக்க வந்திருக்கு

வால் ஆட்டி திரிந்தவரும்
வாயாட்டி நகைத்தவரும்
சிறை புகும் காலமிது
சிரித்து இன்று மலர்கிறது

ஆதிக்க வெறி என்றும்
அரங்கமதில் நிலைக்காது
நீதியின் வெற்றிடங்கள்
நிரம்பிடா உறங்காது

வீரப்பன் விழிக்கின்றான்
விடுதலையை அழைக்கின்றான்
சத்திய தேவதை யோ
சரிதம் எழுத வருகிறாள்

நாம் தமிழர் ஆட்சியில்
நல்லாட்சி செய்திடுவாள்
நலிந்த மக்கள் மகிழ்ந்திடவே
நல்லுதவி புரிந்திடுவாள் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-03-2024

23-03-2024 நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர் போட்டியில் வீரப்பன் மகள் சத்தியா போட்டியிட்ட செய்தி அறிந்த பொழுது …